தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தாகுளம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா மற்றும் கராத்தே போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்கள் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா மற்றும் கராத்தே போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.


பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளிலும் அவர்கள் திறமையாக விளையாடி வெற்றி பெற்று பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். இவர்களின் சாதனை பள்ளிக்கும், மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்துள்ளது.


சாதனை படைத்த மாணவர்களை தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்தி பாராட்டினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் திருமதி பிரியங்கா இ.ஆ.ப., பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி எமல்டா வெலன்சியா ஹெசியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.