ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இளவேலங்கால் ஊராட்சி அயிரவன்பட்டி கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் எல். ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், உதவி பொறியாளர் செந்தில், வட்டார வழங்கல் அலுவலர் வனஜா, கூட்டுறவு சங்க செயலாளர் அரிராம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன், இளைஞரணி சரவணகுமார், மணிகண்டன் உள்ளிட்டோர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


அதேபோல், பரிவில்லிகோட்டை ஊராட்சி கல்லத்திகிணறு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவு அருந்தும் கூடம் மற்றும் சமையலறை கட்டிடத்தையும் எம்.சி. சண்முகையா திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், உதவி பொறியாளர் செந்தில், வருவாய் ஆய்வாளர் ரமா, ஊராட்சி செயலர் மனோகரன், இளைஞரணி குணசிங், ராஜ், அலெக்ஸ், மகளிரணி தாமரைச்செல்வி உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.