தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.


இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் கேட் அருகே உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், அந்தப் பகுதியில் உள்ள முன்னாள் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தியாகி சாமுவேல் நினைவுச் சின்னம் பராமரிப்பின்றி இருப்பதாக வந்த கோரிக்கையை தொடர்ந்து, அந்த நினைவுச் சின்னத்தையும் ஆய்வு செய்தனர்.


வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தியாகி சாமுவேல் நினைவுச் சின்னம் முறையாக பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.