தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து நடத்திய “கதை சொல்லும் நிகழ்வு” இன்று (06.02.2026) வெள்ளிக்கிழமை தாளமுத்துநகர் R.C. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பள்ளி தலைமையாசிரியர் திருமதி வின்சென்ட் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தருவைக்குளம் கிளை செயலாளர் தோழர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார்.
நிகழ்வின் சிறப்பாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் புளோரா மாணவர்–மாணவியர்களுக்கு நற்பண்புகளை வளர்க்கும் கதைகளைச் சொல்லி ஊக்கமளித்தார். கதைகளை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தூத்துக்குடி மாநகர கிளை செயலாளர் தோழர் ஆ. மாரிமுத்து நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்ற அமைப்பாளருமான தோழர் அ. ரவி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், புத்தக வாசிப்பு நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் புளோரா அவர்களுக்கு செல்வின் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். அப்போது அருகில் தலைமையாசிரியர் வின்சென்ட், மாரிமுத்து, லாரன்ஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.