தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பழைய நடைமுறைகள் மற்றும் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள திட்ட மாற்றங்களுக்கிடையிலான வேறுபாடுகளை எடுத்துரைக்கும் வகையில், அத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சாகாயராஜ் தலைமையில், காங்கிரஸ் நிர்வாகிகள் முள்ளக்காடு – பொட்டல்காடு கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பயனாளர்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைநிறைகளை கேட்டறிந்து கலந்துரையாடினர்.
அப்போது, 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் ஏரிகள், குளங்கள் தூர்வாருதல், சாலை மேம்பாடு, வன வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், 100 நாள் வேலை திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பணியாளர்களிடம் நேரடியாகச் சென்று விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பயனாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு, மீள் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் ராஜன், செந்தூர்பாண்டி, ஐசன் சில்வா, நிர்வாகிகள் முனியதங்கம், ஜெயக்கொடி, மார்க்கஸ், பாலகிருஷ்ணன், எஸ்.சி.துறை தலைவர் ஏ.டி. பிரபாகரன், விவசாய பிரிவு பாலசுப்பிரமணியன், அமைப்பு சாரா அணி நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப் பிரிவு ஜான் சாமுவேல், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கேல் பிரபாகர், மாநில மகளிர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துவிஜயா, சாந்திமேரி, மாநில சிறுபான்மை பிரிவு ஆரோக்கியம், இளைஞர் காங்கிரஸ் ஜெயமணி, சுரேஷ், ரன்னிஸ், ஜோசப், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சிவசுப்பு, வெங்கட சுப்பிரமணியன், சுந்தர், ராஜாராம், மகாலிங்கம், முனியசாமி, தனுஷ், சுப்பிரமணியன், ஜாண், முருகேசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.