தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் அருகே “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற முழக்கத்துடன் மாபெரும் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.


இப்பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையேற்று பேசினார். தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவருமான G.V.மார்கண்டேயன், கழக நட்சத்திர பேச்சாளரும் ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான P.H.P. மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.


இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் பெருமாள்சாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் வசந்தம் A.C.ஜெயக்குமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, எட்டயபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாக்கண்ணு, முத்துலட்சுமி, அய்யன் ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.


அதேபோல் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன், தலைமை கழகப் பேச்சாளர்கள் சரவெடி சரத்பாலா, தமிழ் பிரியன், ஆனந்த், வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சௌந்தரராஜன், நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன் உள்ளிட்ட பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக்கினர்.