72ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூட்டுறவுத்துறையின் வளர்ச்சி, சாதனைகள் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

தூத்துக்குடி கூட்டுறவு அமைப்புகளின் விரிவு தூத்துக்குடி மண்டலத்தில் மொத்தம் 264 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உட்பட 4 மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் 150 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் 4 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் 24 பண்டகசாலை

3 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்

8 கூட்டுறவு நகர வங்கிகள்

55 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள்

16 இதர வகை கூட்டுறவுச் சங்கங்கள்

மேலும் பால்உற்பத்தியாளர், வீட்டுவசதி, மீனவர் உள்ளிட்ட 354 பிறதுறை கூட்டுறவு சங்கங்கள் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

விவசாயிகள் நலத்திற்கான பயிர்க்கடன் வழங்கல்

2024–25: 31,997 விவசாயிகளுக்கு ரூ. 348.07 கோடி

2025–26 (31.10.2025 வரை): 12,235 விவசாயிகளுக்கு ரூ. 125.87 கோடி

மக்களுக்கான பல்வேறு கடன் திட்டங்கள்

மகளிர் சுய உதவி குழுக்கள் – ரூ. 92.65 கோடி

டாம்கோ கடன் – ரூ. 1.90 கோடி

டாப்செட்கோ கடன் – ரூ. 1.13 கோடி

தாட்கோ கடன் – ரூ. 0.84 கோடி

மாற்றுத்திறனாளி கடன் – ரூ. 1.02 கோடி

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் – 494 பேருக்கு ரூ. 4.91 கோடி

வேளாண் கடன் & நகைக்கடன் தள்ளுபடி

19,732 விவசாயிகளுக்கு ரூ. 181.03 கோடி வேளாண் கடன் தள்ளுபடி

57192 நகைக்கடன்கள் ரூ. 160.00 கோடி தள்ளுபடி

மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் – ரூ. 75.69 கோடி தள்ளுபடி

பண்ணை பசுமை காய்கறி கடை – பொதுமக்கள் பாராட்டும் சேவை

2014ல் தொடங்கப்பட்ட பண்ணை பசுமை காய்கறி கடை,

தினசரி சராசரி விற்பனை: ரூ.2 இலட்சம்

31.10.2025 வரை மொத்த விற்பனை: ரூ.80.83 கோடி

நடப்பு ஆண்டு அக்டோபர் வரை: ரூ.3.78 கோடி
மாநில அளவில் மூன்று தடவைகள் சிறந்த பண்ணை பசுமை கடை என தேர்வாகியுள்ளது.

முதல்வர் மருந்தகம் – 20 கடைகள் செயல்பாடு

கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் மருந்தகங்கள் – 11

தனியார் தொழில்முனைவோர் நடத்தும் மருந்தகங்கள் – 9

மொத்த விற்பனை (24.02.2025–31.10.2025): ரூ.38.31 இலட்சம்

பயனடைந்தோர்: 48,591 பேர்

TNMSC மூலம் ஜெனரிக் மருந்துகளும், TNCCF மூலம் மற்ற மருந்துகளும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் சந்தையில் மருந்து விலை கட்டுப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு நன்மை கிடைக்கிறது.

பொது சேவை மையங்கள்

மாவட்டத்தில் செயல்படும் 147 பொது சேவை மையங்கள் மூலம் நடப்பு ஆண்டில் 40,012 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொது விநியோகத் திட்டம் (PDS)

862 நியாயவிலைக் கடைகள் செயல்பாட்டில்

4,57,621 குடும்ப அட்டைகள் மின்னணுவாக்கம்

மாதம் 6,396 மெட்ரிக் டன் இலவச அரிசி விநியோகம்

3,88,713 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி வழங்கல் – 32,864 பேர்

UPI கட்டணம் தற்போது 136 கடைகளில் செயல்பாட்டில் உள்ளது; விரைவில் அனைத்திற்கும் விரிவாக்கம் செய்ய உள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மண்டல பதிவாளர் ராஜேஷ், துணை பதிவாளர் விஜய் குமாரி, சரக துணை பதிவாளர் ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் கூட்டுறவு செயலாட்சியர் சீனிவாசன், மேலூர் கூட்டுறவு நகர வங்கியின் செயலாட்சியர் முத்து செல்வி, கூட்டுறவு அலுவலர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சாம் டேனியல் ராஜ் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்தன.