பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தின் 70ஆவது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆலய விழா குழு நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இ.ஆ.ப. அவர்களை நேரில் சந்தித்து விழா அழைப்பிதழை மரியாதையுடன் வழங்கினர்.
அத்துடன், “பாஞ்சாலங்குறிச்சி போர்கள்” எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூலையும் ஆட்சியருக்கு நினைவுப்பரிசாக வழங்கினர். இந்த சந்திப்பில் திருவிழாவின் சிறப்புகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வீரசக்கதேவி ஆலய விழா குழு தலைவர் வலசை கண்ணன், வீரசத்தி தேவி ஆலய குழு தலைவர் ஆர். கண்ணன் (குளத்தூர் மாஜி ஜமீன்தார்), கௌரவத் தலைவர்கள், மாப்பிள்ளைச்சாமி, வெயில்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.