Breaking News

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா: புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு!!

  • Share on

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 2025–2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் பேரவை துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. ஷிபானா தலைமை தாங்கினார்.


கல்லூரி துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ், தேர்வுக்கட்டுப்பாட்டு ஆணையர் அருட்சகோதரி ரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சகாய செல்வி கலந்துகொண்டு, மாணவர்கள் தலைமைத்திறன், பொறுப்புணர்வு மற்றும் சமூகப் பங்களிப்பை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். மாணவர் பேரவை உறுப்பினரும் வேதியியல் துறைப் பேராசிரியருமான முனைவர் பர்வீன் சுல்தானா வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் மாணவர் பேரவைக்கான புதிய நிர்வாகிகளை நியமித்தார்.


உதவிபெறும் பிரிவு:


M. பிரியதர்ஷினி (வரலாற்றுத்துறை) – பேரவைத் தலைவி


M. கேத்தரின் லியோ (கணிதவியல் துறை) – பேரவை செயலர்


R. பிரின்ஸி ஸ்னோஸ்லின் (வணிகவியல் துறை) – பேரவை துணைத்தலைவர்


சுயநிதிப்பிரிவு:


R. பொன் செல்வி (வணிகவியல் துறை) – பேரவைத் தலைவி


F. லியாண்ட்ரா ஃபேனி டா (வணிக மேலாண்மைத் துறை) – பேரவை செயலர்


S. அனுஷ்யா (உளவியல் துறை) – பேரவை துணைத்தலைவர்


மேலும், பல்வேறு துறைகளின் வகுப்புத் தலைவிகள், கல்லூரி கலை மன்றங்கள் மற்றும் சமூகச் சங்கங்களின் தலைவிகள், கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவியர் நலனுக்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, "விசுவாசத்தில் முயற்சி செய்யுங்கள்" என்ற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு "நம்பிக்கையின் சிறகுகள்" என்ற பொருண்மையில் மாணவியரின் நிலைக்காட்சி நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மாணவர் பேரவை உறுப்பினரும் துறைப் பேராசிரியருமான முத்து கலைவாணி நன்றியுரை வழங்கினார். கல்லூரிப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.


  • Share on

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு மகாயாகம் – உலக நன்மை வேண்டி பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை!!

  • Share on