Breaking News

இரட்டைமலை சீனிவாசனாரின் 167-வது பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் அரசியல், சமூக அமைப்புகள் இணைந்து மரியாதை!!

  • Share on

தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை மற்றும் ஆதித்தமிழர் புரட்சி கழகம் சார்பில், சமூக நீதிப் போராளியும் லண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற தலைவருமான இரட்டைமலை சீனிவாசனாரின் 167-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி போல்டன்புரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


இதையொட்டி, போல்டன்புரத்தில் அமைந்துள்ள இரட்டைமலை சீனிவாசனாரின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவையின் நிறுவனர் தலைவர் புலி.செ. இளவரச பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.


நிகழ்ச்சியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவு அறக்கட்டளை தலைவர் ஆனந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பிரசாத் முன்னிலை வகித்தார்.


மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் அர்ஜுன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலச் செயலாளர் விஜி பாண்டியன், ஆட்டோ கணேசன், தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் கண்ணன், முத்துலட்சுமி, கார்த்திக் முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசனாரின் சமூகப் பணிகளையும் வரலாற்றுப் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சியின் நிறைவில், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பு நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இரட்டைமலை சீனிவாசனாரின் பணிகளை இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


  • Share on

தூத்துக்குடி மாவட்ட அரசுத் துறை ஓட்டுநர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!!

“விளையும் பயிர்” மாவட்ட தடகளப் போட்டி: 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாக பங்கேற்பு!!

  • Share on

Trending News