Breaking News

காங்கிரஸ் நிர்வாகி வீடு மீது தாக்குதல் முயற்சி; நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு!!

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கிரிஷ் சொடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், நேற்று இரவு பெருமாள்சாமியின் வீட்டின் மீது கல் வீசப்பட்ட சம்பவத்திற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் கோரப்பட்டுள்ளது.


இச்சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள பெருமாள்சாமி, அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியினரை அச்சுறுத்தும் நோக்கில் இத்தகைய செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஜனநாயக முறையில் செயல்படும் அரசியல் கட்சிகளின் குரலை ஒடுக்க எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களை இழிவுபடுத்துபவர்களையும், வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் கட்சி சார்பில் வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.


  • Share on

உலக நன்மை வேண்டி ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹாயாகம்: ஸ்ரீசித்தர் பீடத்தில் பக்தர்கள் திரளான பங்கேற்பு!!

  • Share on

Trending News