Breaking News

தூய மரியன்னை கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தல்: மாணவியர் உற்சாக வாக்குப்பதிவில் புதிய நிர்வாகிகள் தேர்வு!!

  • Share on

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 02.07.2026 அன்று மாணவர் பேரவைத் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. ஷிபானா மற்றும் சுயநிதிப்பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி தேர்தலைத் தொடங்கி வைத்தனர்.


தேர்தலில் கல்லூரி மாணவியர் 1,130 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாணவர் பேரவைத் தலைவியாக வரலாற்றுத்துறை மூன்றாமாண்டு மாணவி எம். பிரியதர்ஷினி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


சுயநிதிப்பிரிவு மாணவர் பேரவைத் தலைவியாக வணிகவியல் துறை மாணவி ஆர். பொன் செல்வி வெற்றி பெற்றார். செயலர்களாக கணிதவியல் மூன்றாமாண்டு மாணவி எம். கேத்தரின் லியோ மற்றும் வணிக மேலாண்மைத் துறை மாணவி எப். லியாண்ட்ரா ஃபேனி டா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


துணைத் தலைவர்களாக வணிகவியல் துறை மூன்றாமாண்டு மாணவி ஆர். பிரின்ஸி ஸ்னோஸ்லின் மற்றும் உளவியல் துறை மூன்றாமாண்டு மாணவி எஸ். அனுஷ்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று ஜனநாயக முறையில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்வு செய்த இந்த தேர்தல், கல்லூரி வளாகத்தில் உற்சாகமான சூழலை உருவாக்கியது.


  • Share on

101 பெண்கள் முளைப்பாரி, 504 பெண்கள் மாவிளக்கு ஏந்தி பக்தி பேரணி – தூத்துக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா கோலாகலம்!!

  • Share on

Trending News