கோவில்பட்டி அருகே வேலாயுதபுரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவின்போது பள்ளி ஆசிரியர் மற்றும் குழந்தைகள் சார்பில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. பெருமாள்சாமி அவர்களிடம் சமையல் பயன்பாட்டிற்காக கேஸ் அடுப்பு வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட மாவட்ட தலைவர் கே. பெருமாள்சாமி அவர்கள், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கேஸ் அடுப்பை வழங்கி குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்தார். நிகழ்ச்சி கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் கே.டி.பி. அருண்பாண்டியன் தலைமையிலும், கோவில்பட்டி வட்டாரத் தலைவர் ரமேஷ் மூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் மற்றும் ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ராஜசேகரன், மாவட்ட செயலாளர் துரைராஜ், வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.வி.எஸ். வேல்முருகேசன், 5வது வார்டு தலைவர் கே.டி. பிச்சைக்கனி, முன்னாள் வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜ் நாயக்கர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சுடலைமணி, கோவில்பட்டி தொகுதி தலைவர் வழக்கறிஞர் ராமசந்திரன், ஆறுமுகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கேஸ் அடுப்பு பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக பள்ளி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி நிர்வாகம் சார்பில் மாவட்ட தலைவர் கே. பெருமாள்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த அனைவருக்கும் மாவட்ட தலைவர் கே. பெருமாள்சாமி அவர்கள் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
மேலும், மாற்றுக் கட்சியில் இருந்து இளைஞர்களை வழிநடத்தி காங்கிரஸ் கட்சியில் இணைத்த இளம்புவனம் சின்னதுரை அவர்களுக்கு மாவட்ட தலைவர் நன்றி தெரிவித்தார். இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்த புதியம்புத்தூர் வட்டாரத் தலைவர் ஜேம்ஸ் மற்றும் ஹரி ஆகியோரின் பணியையும் அவர் பாராட்டி நன்றி தெரிவித்தார். மக்கள் நலப் பணிகளும், கட்சி வளர்ச்சிப் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.