Breaking News

“தூத்துக்குடி–சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை உடனே தொடங்க வேண்டும் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சித்ராங்கதன் கோரிக்கை”

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் . முருகன் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.


அந்த மனுவில், மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தூத்துக்குடி மாவட்ட முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக விண்வெளி பூங்கா, கேந்திரிய வித்யாலயா பள்ளி, கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட திட்டங்கள் மாவட்ட வளர்ச்சிக்கு புதிய உந்துதலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில்களின் பராமரிப்புப் பணிகளுக்காக அவற்றை திருநெல்வேலிக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை காரணமாக காலதாமதம் ஏற்படுவதாகவும், ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் ஏற்கனவே போதிய தண்டவாள வசதிகள் இருப்பதால் அங்கு பிட் லைன் அமைக்கப்பட்டால் ரயில்களை அங்கேயே பராமரிக்க முடிவதுடன், திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில் சேவைகளை இயக்கவும் வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அறுபடை வீடுகளில் ஒன்றான Arulmigu Subramaniya Swamy Temple கோயிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதை கருத்தில் கொண்டு, சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நேரடி புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தற்போது திருநெல்வேலி–மும்பை இடையே இயக்கப்படும் Chalukya Express ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி–சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை விரைவாக தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், திருச்செந்தூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி, வணிக முன்னேற்றம், சுற்றுலா மேம்பாடு மற்றும் பொதுமக்களின் விரைவான போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் எல்.முருகனிடம் சித்ராங்கதன் கேட்டுக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில வர்த்தகப் பிரிவு தலைவர் சதீஷ் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், திருச்செந்தூர் மண்டலத் தலைவர் செல்வகுமரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

எல்லைப் பாதுகாப்புப் பணியில் வீரமரணம் அடைந்த அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர் சுடலைமணிக்கு அமைச்சர் ஸ்ரீநாத் அஞ்சலி!!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மேற்கு மண்டல் ஆலோசனைக் கூட்டம்: வார்டு வாரியாக களப்பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்!!

  • Share on

Trending News