Breaking News

போதைப்பொருள் இல்லா சமுதாயம் உருவாக்க மாணவர்கள் உறுதிமொழி!!

  • Share on

தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான அ.வெ. சுபாஷினி கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என மாணவர்களிடம் வலியுறுத்தினார்.


தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், சூசைநாதர் மதுவிலக்கு இயக்கத்தின் முன்னாள் இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் டி கிரேஸ் சிறப்புரையாற்றினார்.


மாணவர்கள் போதைப் பொருட்களிலிருந்து விலகி நன்னெறி வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஊடகப் போதை, மதுப் போதை உள்ளிட்ட வாழ்வை பாதிக்கும் அனைத்து விதமான அடிமைப்பழக்கங்களிலிருந்தும் விலகி அறநெறி சார்ந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி பிரமிளா பிரான்சிஸ், முதல்வர் அருட்சகோதரி விஜய் அன், அருட்சகோதரிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில் அலுவலகப் பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, “போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற முழக்கத்துடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.


  • Share on

முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா: 504 திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

பசும்பொன் திரு. முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக பொறுப்பேற்ற முனைவர் ஜெ.சரவணக்குமாருக்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகம் வாழ்த்து!!

  • Share on

Trending News