தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக புதிதாக பொறுப்பேற்றுள்ள திருமதி காமாட்சி அவர்களை, தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, மாநிலத் தலைவர் மருதப்பெருமாள், மாநிலச் செயலாளர் ஜெயராஜ், மாநிலப் பொருளாளர் செல்வகுமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் முழுமையாக சென்றடைய தேவையான ஒத்துழைப்புகளை சங்கத்தின் சார்பில் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டப் பயன்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட உறுதியளித்தனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி காமாட்சி அவர்கள் சிறப்பாக பணியாற்றி, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு சாதனைகளை படைக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
Lion. M. மருதப்பெருமாள், M.Com
மாநிலத் தலைவர்,
தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம்.
செல்: 94426 35879.