Breaking News

முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழா: கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக வெற்றிக் கழகம்!!

  • Share on

தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கட்சியின் தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பல்க் திடலில் சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்விற்கு எஸ்.டி.ஆர். விஜய் சீலன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் சதீஷ்குமார், வழக்கறிஞர் வாரியார், ரவிக்குமார், தனபால்ராஜ், சுந்தரலிங்கம், முருகன், திருப்பதி, அன்புசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு பகுதி செயலாளர் இசக்கிமுத்து மற்றும் பொன்ராஜ் வரவேற்புரை ஆற்றினர்.


விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெண்களுக்கு சேலைகள் மற்றும் அரிசி பைகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


மேலும், மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கப் பரிசுத் தொகைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் தினேஷ், மாரிமுத்து, ரோமன்ஸ், வெங்கடேஷ், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பொன்ராஜா, ஜோயல், கஜன், அசோக், பாலமுருகன், தினகரன் ஆகியோர் செய்திருந்தனர்.


மேலும், நிர்வாகிகள் பிரவீன்குமார், கிருபாகரன், ஆனந்தராஜ், முனிராஜ், பச்சைபெருமாள், சக்திவேல், ராஜேஷ், முருகேசன், ஜோசப், பாலமுகுந்தன், அலெக்ஸ், பெவின், செல்வரதி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர். இறுதியாக பிரவீன் நன்றி கூறினார்.


  • Share on

நான்கு மணி நேரத்தில் சான்று... 7 மாத குழந்தையின் உயிரைக் காக்க ஓடிய எட்டயபுரம் வட்டாட்சியர்!

  • Share on

Trending News