Breaking News

குமிழ்முனை பதிப்பகத்தின் 9 புதிய நூல்கள் வெளியீடு தூத்துக்குடியில் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் திரளான பங்கேற்பு!!

  • Share on

தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள பொ. தங்கம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளியில் குமிழ்முனை பதிப்பகத்தின் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.


விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் ம. ஆரோக்கிய செல்வ சுந்தரி, முத்து ஷீலா, முனைவர் ஆ. தேவராஜ், கிளாரன்ஸ் பீட்டர் மற்றும் ரா. கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி எழுத்தாளர்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக குமிழ்முனை பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒன்பது புதிய நூல்கள் சிறப்பு விருந்தினர்களின் கரங்களால் வெளியிடப்பட்டன.


எழுத்தாளர் அன்பரசு எழுதிய “குழந்தைகள் மனிதர்கள் மருத்துவர்கள்” (குறுநாவல்), “தியாகராஜன்” (குறுநாவல்), “நூறு தருணங்கள்” (கவிதைத் தொகுப்பு) மற்றும் “இறப்பு சான்றிதழ்” (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்களை ரா. கருப்பசாமி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் காட்வின் எழுதிய “வரதட்சணை” கட்டுரைத் தொகுப்பை முத்து ஷீலா வெளியிட்டார். கவிஞர் வேந்தன் பிரபாகரன் எழுதிய “விரல்களில் அடங்கும் விண்மீன்” கவிதை நூலை கிளாரன்ஸ் பீட்டர் வெளியிட்டார். தொல்லியல் ஆய்வு நூலான எழுத்தாளர் மா. ஜெயமாரி எழுதிய “கூரான் கோட்டை” நூலை முனைவர் ம. ஆரோக்கிய செல்வ சுந்தரி வெளியிட்டார்.


நிகழ்வில் கலந்து கொண்ட நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ், போலியோ சொட்டு மருந்து தினத்தை முன்னிட்டு அதனை வலியுறுத்தும் வகையில் இரண்டு நிமிடக் கவிதை ஒன்றை வாசித்தார். தொடர்ந்து நூலாசிரியர்கள் தங்களது படைப்புகளின் உருவாக்கம், கருப்பொருள் மற்றும் இலக்கியப் பயணம் குறித்து ஏற்புரை வழங்கினர். விழாவில் புலவர் முத்துசாமி பதிப்பகத்தை வாழ்த்தி வாழ்த்துப்பா பாடினார். மேலும் செரிப், ராஜ்குமார், பிரபாவதி, வள்ளிநாயகி, லோகு உலகம்மாள், அருந்ததி அரசு, பத்மநாபன், கலையின் குரல் சக்திவேல் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியை எழுத்தாளர் ரமேஷ் அறிவழகன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிறைவாக குமிழ்முனை பதிப்பகத்தின் குமிழ்முனை சைமன் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.


  • Share on

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மேற்கு மண்டல் ஆலோசனைக் கூட்டம்: வார்டு வாரியாக களப்பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்!!

அங்கன்வாடி பள்ளி குழந்தைகளின் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட காங்கிரஸ் தலைவர் – புதிய உறுப்பினர்கள் காங்கிரசில் இணைந்தனர்!!

  • Share on

Trending News