புரட்சி பாரதம் கட்சியின் 48வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று (11.02.2026) புதன்கிழமை மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் ஜங்ஷன் பேருந்து நிறுத்தம் அருகில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சியின் தேசிய தலைவரும் K.V. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பூவை M. ஜெகன் மூர்த்தியின் ஆணைக்கேற்பவும், கட்சி பொதுச் செயலாளர் D. ருசேந்திர குமார் மற்றும் மாநில செயலாளர் பரணி P. மாரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் ஆட்டோ சங்கத்தின் புதிய பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆட்டோ சங்க செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி பொருளாளர் மகேந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மு. மணிகண்டன், மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் C. மாரியப்பன், மாவட்ட உரிமை மீட்பு குழு செயலாளர் கோ. அருள்தாஸ், மாநகர் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் ரேவதி, மகளிர் அணி துணை செயலாளர் மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.