ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படியும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் கழக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி ஆலோசனைப்படியும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான எம்.சி. சண்முகையா தலைமையில், 12-02-2026 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழகச் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு எம்.சி. சண்முகையா அழைப்பு விடுத்துள்ளார்.