மத்திய அரசின் சமீபத்திய பொருளாதார சீர்திருத்த முடிவுகளுக்கு எதிராக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (AIIEA) கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 2025 டிசம்பர் 12 அன்று பெரு நிறுவனங்களுக்கு சாதகமான பல பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது. அதில் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை 100 சதவீதமாக உயர்த்துவதும், காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்த) மசோதாவுக்கு அனுமதி வழங்குவதும் முக்கியமானதாகும்.
1999ஆம் ஆண்டு இன்சூரன்ஸ் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் காப்பீட்டுத் துறை முழு அரசுடைமையிலிருந்து விலக்கப்பட்டது. அதன் பின்னர் ஆயுள் மற்றும் பொது இன்சூரன்ஸ் துறைகளில் அந்நிய கூட்டாளிகளுடன் கூடிய பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்நிறுவனங்களுக்கு மூலதன பற்றாக்குறை எப்போதும் ஒரு தடையாக இருந்ததில்லை. உண்மையில், காப்பீட்டுத் துறையில் பயன்படுத்தப்படும் மொத்த மூலதனத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு சுமார் 32 சதவீதம் மட்டுமே என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய சூழலில், அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயர்த்தி, இந்தியாவில் அந்நிய மூலதனத்திற்கு முழுமையான சுதந்திரம் வழங்குவது முற்றிலும் பகுத்தாய்வு அற்ற முடிவாகும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு இந்திய பொருளாதாரத்திற்கும், இந்திய காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களை கைப்பற்றும் பகைமைத் தன்மை கொண்ட (hostile) முயற்சிகளுக்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
அந்நிய மூலதனத்திற்கு முழு சுதந்திரம் மற்றும் அதிக அணுகல் வழங்கப்படுவது, காப்பீட்டுத் துறையின் சீரான வளர்ச்சியைத் தடுக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது. மக்களுக்கும் காப்பீட்டு வணிகத்திற்கும் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக, இலாபமே பிரதான நோக்கமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால், இந்திய சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் நலன்கள் கடுமையாக பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்தது. மேலும், அந்நிய மூலதனம் ஒருபோதும் உள்நாட்டு சேமிப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது; உள்நாட்டு சேமிப்புகளை அந்நிய மூலதனத்தின் கைகளில் ஒப்படைப்பது பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் பொருள் அற்ற செயல் எனவும் விமர்சித்துள்ளது.
காப்பீட்டு நிறுவனங்களை காப்பீட்டற்ற நிறுவனங்களுடன் இணைப்பதற்கு அனுமதி வழங்குவது, நாடாளுமன்ற கண்காணிப்பிலிருந்து விலகி இன்சூரன்ஸ் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு அளவுக்கு மீறிய அதிகாரங்களை வழங்குவது, இடையீட்டாளர்களுக்கு ஒருமுறை பதிவு முறை கொண்டு வருவது, வெளிநாட்டு மறுகாப்பீட்டாளர்களுக்கான நிகர சொந்த நிதி (Net Owned Funds – NOF) வரம்பை தற்போதைய ரூ.5,000 கோடியில் இருந்து ரூ.1,000 கோடியாகக் குறைப்பது போன்ற திருத்தங்கள் அனைத்தும், ஆயுள் காப்பீட்டு வணிகத்தை தேசியமயமாக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிய 1956-க்கு முந்தைய நிலைக்கே நாட்டை மீண்டும் தள்ளும் அபாயம் உள்ளதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்தும் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. காப்பீட்டுச் சட்டம் 1938, எல்.ஐ.சி சட்டம் 1956 மற்றும் இன்சூரன்ஸ் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் 1999 ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இந்தப் பின்னடைவான திருத்த முன்மொழிவுகளுக்கு எதிராக அரசை எச்சரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பெரு நிறுவன நலன் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை கைவிட்டு, மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளுக்கு மாற வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பெரு நிறுவனங்களின் இலாபத்தைவிட மக்களின் நலனையே அரசு முதன்மைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு எதிராக பொதுமக்கள் கருத்தை ஒருங்கிணைக்கும் பணிகளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இத்தகவலை செய்தியாளர் சந்திப்பில் திரு. சுவாமிநாதன் முன்னாள் பொதுச் செயலாளர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (AIIEA)
தெரிவித்தார்.
தூத்துக்குடி
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீடு: ‘மக்கள் நலத்துக்கு எதிரான பின்னடைவு’ — அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கடும் கண்டனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் புதிய தார் சாலை, வடிகால் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
பெண்கள் உரிமை பாதையில் பொியார்–கலைஞர் ஒளிவிளக்கு: ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர்வில் திமுக ஆட்சி – அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!!
இதையும் படிக்கலாம்
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026