மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் கீதாஜீவன், நேற்று (03.04.2026 - வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாநகரில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மாநகரின் 37 மற்றும் 42வது வார்டுகளுக்குட்பட்ட தாமோதர நகர், புதுக்கிராமம், பெருமாள் தெரு, மேலச் சண்முகபுரம், வண்ணார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு தோறும் சென்று மக்களை சந்தித்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.


பொதுமக்களுடன் நேரடியாக உரையாடி, உள்ளூர் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தும், தீர்வுகளை உறுதியளித்தும் வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, பகுதி முழுவதும் தேர்தல் உற்சாகத்தை ஏற்படுத்தினர்.


இந்நிகழ்வில் ஏ.பி.சி.வி. சண்முகம், சகாயராஜ், தனலட்சுமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பகுதிச் செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாநகராட்சி மண்டல தலைவர் அன்னலட்சுமி, வட்டச் செயலாளர்கள் சுரேஷ் மகாராஜன், மாரிச் செல்வம் ஈஸ்வரன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.