தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில், ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் அணி சார்பில் “எதிர்காலத்தை நோக்கி” என்ற தலைப்பில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சி ஹிதாயத்துல் இஸ்லாம் நிர்வாகிகள் பி. அப்துல் நாசர், எஸ். சாகுல் ஹமீது, எஸ். பீர் முகம்மது, அன்சார் அலி, சித்திக், ரியாஸ் உள்ளிட்டோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அண்ணா நகர் ஜமாத் பள்ளி செயலாளர் சேக் முகமது தலைமை தாங்கினார். தலைவர் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


அண்ணா நகர் இமாம் அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம் மற்றும் இமாம் சித்தீக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க நிறுவனர் சி.எம்.என். சலீம் மற்றும் அல்-அஸ்லாமியா இஸ்லாமியக் கல்லூரி முதல்வர் எம்.ஏ. ஷவ்கத் அலி உஸ்மானி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள், தொழில்நுட்ப கல்வி, போட்டித் தேர்வுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினர்.


மேலும், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாநிலத் தலைவர் தூத்துக்குடி சம்சுதீன், ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் செயலாளர் சம்சுதீன், முன்னாள் பொருளாளர் இப்ராஹிம் மூசா, தமுமுக மாவட்ட செயலாளர் யூசுப், டாக்டர் முகம்மது நசீர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் கிதர் பிஸ்மி, தொழிலதிபர் கே.எம். கான், அர்-ரஹ்மானியா நற்சேவை மன்ற தலைவர் மீராசா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் பயனுள்ள ஆலோசனைகளை பெற்றனர். மாணவர்கள் தங்களது எதிர்கால இலக்குகளை தெளிவாக நிர்ணயித்து, கல்வி மூலம் முன்னேற்றம் அடைய தேவையான அறிவும் ஊக்கமும் பெற்றதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.