தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் மக்கள் நலப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கன்னியாகுமாரி பெருங்கோட்ட அமைப்பு இணைச்செயலாளர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினார். கட்சியின் வளர்ச்சிப் பணிகள், அடிமட்ட அமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் மாவட்ட அளவிலான அரசியல் செயல்திட்டங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி வாரியான களநிலவரங்கள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, மத்திய அரசின் சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் மாவட்ட மக்களின் நலனுக்கான சேவைகளை அதிகரிப்பது குறித்தும் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன.
இந்த கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், கனல் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்ட துணைத்தலைவர்கள் சிவராமன், வழக்கறிஞர் வாரியர், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், நவமணிகண்டன், மாவட்ட செயலாளர் சபரிமலை, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் மண்டல் தலைவர்கள் சரவணன், மணிகண்டன், மாதவன், சுதா, லிங்கசெல்வம், ராஜேஷ்கனி, சங்கர், செல்வசங்கர், ரதீஸ்குமார், பாப்பா, பேச்சிதுரை, செல்வகுமரன், தங்ககண்ணன் மற்றும் மண்டல் பிரபாரிகள் காளிராஜா, அர்ஜூன்பாலாஜி, குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கட்சிப் பணிகளை தீவிரப்படுத்த உறுதி எடுத்தனர்.