திரைப்பட நடிகர் சூர்யா நடிப்பிலும், RJ பாலாஜி இயக்கத்திலும் உருவான கருப்பு திரைப்படம் இன்று காலை தூத்துக்குடி பெரிசன் பிளாசா திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாக வரவேற்பைப் பெற்றது.


இன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற முதல் காட்சி முன்னிட்டு, சூர்யா ரசிகர்கள் சார்பில் வெடி வெடித்து, கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு கேக் வெட்டி, சூர்யா நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கு வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த ரசிகர்களுக்கும் கேக் வழங்கப்பட்டு மகிழ்ச்சி பகிரப்பட்டது. மேலும் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகளையும் மேயர் வழங்கி படத்தை காண ஏற்பாடு செய்தார். பின்னர் திரையிடப்பட்ட ‘கருப்பு’ திரைப்படத்தை திரளான ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். படம் வெளியான முதல் நாளிலேயே திரையரங்கம் விழாக்கோலமாக மாறியது குறிப்பிடத்தக்கது.