தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, தொகுதி முழுவதும் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள அவரது வருகை, அதிமுக மற்றும் கூட்டணி நிர்வாகிகளில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறிவிப்பு வெளியானதும், தொண்டர்கள் வீடு தோறும் சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு போன்றவற்றை முன்னிறுத்தி செயல்படுவேன் என சி.த. செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தொகுதியில் கடும் போட்டி நிலவ உள்ள நிலையில், அவரது ‘ரீ-என்ட்ரி’ தேர்தல் களத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.