ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியை தமிழகத்தின் முன்னேற்றமான தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்ற உறுதியுடன் மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சியின் பொதுச் செயலாளர் சி. அருணா தேவி ரமேஷ் பாண்டியன்.
மக்களின் அடிப்படை தேவைகள், உரிமைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நிலையை மாற்றுவதற்கான நேரம் இதுவே என வலியுறுத்தினார். “மக்களின் உரிமையை மீட்டெடுக்க சட்டமன்றத்தில் என் குரல் ஓங்கி ஒலிக்கும். ஓட்டப்பிடாரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான முன்னேற்றத்தை கொண்டு வர நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்” என்று தெரிவித்தார்.
மேலும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான தனித்துவமான திட்டங்கள் மூலம் தொகுதியின் வளர்ச்சியை உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். “நான் உங்களில் ஒருவராக இருக்கிறேன். உங்கள் பிரச்சனைகளை உணர்ந்து தீர்வு காணும் நம்பிக்கையுடன் என்னை ஆதரிக்கவும்” என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
மாற்றத்திற்காக சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், மக்கள் ஆதரவு கிடைத்தால் ஓட்டப்பிடாரத்தை முன்னேற்றத்தின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வேன் என்ற உறுதியை வெளிப்படுத்தினார்.