தூத்துக்குடி திரவியபுரம் மெயின் ரோடு - பொன்னகரம் பகுதியில் இன்று (02.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை ALL CAN TRUST அமைப்பின் சார்பில் 390வது வார மரநடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.

“பெற்ற அன்னை ஊட்டுவது பாசம்; இயற்கை அன்னை ஊட்டுவது சுவாசம்” என்ற வாசகத்தை முன்னிறுத்தி, சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பாதுகாப்பதற்கான உறுதியையும் எடுத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் “மரம் நடுவோம், இயற்கையை பாதுகாப்போம்” என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் மரநடுகையை நிறைவு செய்தனர்.