தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் கேட் தெப்பக்குளம் மற்றும் ஒன்றாம் கேட் காந்தி சிலை அருகில் உருவாக்கப்பட்டு வரும் ஓய்விடப் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்விடப் பூங்கா பணிகள் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதற்காக பணித் தரநிலைகள், சுற்றுப்புற சுத்தம், நடைபாதை அமைப்பு, பசுமை வளர்ப்பு போன்ற அம்சங்களை மேயர் முழுமையாக ஆய்வு செய்தார்.

இத்தாய்வில் வட்ட கழக செயலாளர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.

மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இப்பூங்கா சிறப்பாக அமைய தேவையான கூடுதல் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு மேயர் ஆலோசனை வழங்கினார்.