தூத்துக்குடி அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், Naam Tamilar Katchi தலைவர் சீமான் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நானும் அரசியலில் இருக்கிறேன் எனும் வெளிச்சத்திற்காக, மறைந்த தலைவர்களின் வரலாறு அறியாமல், அரசியல் நாகரீகம் இன்றி வாய்க்கு வந்ததை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிதற்றிக்கொண்டிருக்கும் மக்களால் சீமான் அரசியல் பொய்யர் எனவே அழைக்கப்படுகிறார்.
அரசியல் களத்தில் இல்லாத மறைந்த தலைவர்களைப் பற்றி பேசும்போது, அவர்களின் பங்களிப்புகளையும் மரபுகளையும் நினைவுகூர்வது அரசியல் நாகரீகத்தின் ஒரு முக்கிய அங்கம். குறிப்பாக அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக அரசியலில் பேராதிக்கம் செலுத்திய தலைவர்கள். இன்று கூட எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
இத்தகைய எம்.ஜி.ஆர் குறித்து சீமான் இன்று பேசிய தரம் தாழ்ந்த பேச்சு, அரசியல் களத்தில் மன்னிக்க முடியாத குற்றமாகும். தாங்கள் தலைவர் எனக் கொண்டாடும் மேதகு பிரபாகரனே கூட எம்.ஜி.ஆர் அவர்களை தலைவராக மதித்தவர் என்பது வரலாறு. அதைப் புரியாமல் பிதற்றும் நிலை, சீமான் அரசியல் அறிவின்மையை வெளிப்படுத்துகிறது. இனியும் எங்கள் தலைவர்களை குறைத்து பேசும் நிலை தொடர்ந்தால், அது சீமான் அரசியல் வாழ்க்கையின் முடிவிற்கான தொடக்கம் என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
மறைந்த எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா வழியில், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி அமைப்போம் என்ற இலக்குடன் நாம் உறுதியாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம்” என சி.த.செல்லப்பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
“அரசியல் பொய்யர் சீமான் – எம்.ஜி.ஆர் குறித்து பேசியது மன்னிக்க முடியாதது” : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கண்டனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
லஞ்சமில்லா தூத்துக்குடி நோக்கில் – பிரான்சிஸ் புதிய இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!!
அடுத்த
ராஜீவ் நகர் பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026