சமூக சிந்தனையும், கலாச்சார விழிப்புணர்வும் ஒருங்கே கலக்கும் புதிய ஊடக முயற்சியாக “இரவி FM” இணைய வானொலி இன்று (நவம்பர் 1) தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது.
இந்த தொடக்க விழாவில், ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் பால. மணிவண்ணன் அவர்கள் ஒலிபரப்பு அரங்கை திறந்து வைத்தார். தூத்துக்குடி வானொலி நிலையத்தின் மேனாள் நிகழ்ச்சி தலைவர் முனைவர் எம். ராதாகிருஷ்ணன் அவர்கள், “சமுதாய மாற்றத்திற்கான ஊடகப் பொறுப்பு இணைய வானொலிகளின் வழியே விரிவடைகிறது” எனக் கூறி சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் ஒலிபரப்பைத் தொடங்கி வைத்தார்.
பிரித்திங்கா ஆலய சத்குரு சீனிவாச சித்தர் மற்றும் டி. சவேரியார் புரம் பங்குத்தந்தை குழந்தை ராஜன் ஆகியோர் *‘வானொலி இலச்சினை’*யை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர். இலக்கியப் பேச்சாளர் ஷெரிப் அவர்கள் நிகழ்ச்சி குறிப்பேட்டை வெளியிட, அதை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் மாரிமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மின்னிதழ் ஆர்வலர் செல்வின் மற்றும் வணிகச் செயல்பாட்டாளர் லாரன்ஸ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சமூக ஊடக உலகில் புதிய குரலாகத் திகழும் “இரவி FM” வானொலி நிகழ்ச்சிகளை, ‘இரவி FM’ செயலியை பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழலாம்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் “இரவி FM” இணைய வானொலி தொடக்கம் – சமூக மாற்றத்திற்கான புதிய ஒலி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி.சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வளர்ச்சி பணிகள் வேகமெடித்தன!
அடுத்த
ராமச்சந்திராபுரம் கிராம மக்களுக்கு தனி ரேஷன் கடை அமைக்க கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026