நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் உற்சாகமாக தொடங்கப்பட்டன.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தளவாய்புரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சுகாதாரத் துறையினர் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்புக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் சண்முகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஜவஹர், மருத்துவ அலுவலர் டாக்டர் கோகுல், சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து, குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் திலகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளை எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதேபோல், முப்பிலிவெட்டி கிராமத்தில் 13 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணிகளும், பாஞ்சாலங்குறிச்சி இந்திரா நகரில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை பணிகளும் எம்.சி.சண்முகையா அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டன.
முக்கியமாக, ஒட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகளும் எம்.சி.சண்முகையா அவர்களால் தொடங்கப்பட்டன.
அனைத்து இடங்களிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஜவஹர், துணை அலுவலர் கனகவள்ளி, உதவி பொறியாளர்கள் செல்வபாக்கியம், பத்மாவதி, வருவாய் ஆய்வாளர் ஸ்ரீரங்க பெருமாள், ஊராட்சி செயலர் ராமலிங்கம், நகர செயலாளர் பச்சை பெருமாள், CPM ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், கழக நிர்வாகிகள் உலகையா, காமராஜ், கிருஷ்ணசாமி, கோபால், இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வுகள் மூலம் ஒட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் வளர்ச்சி பணிகள் தீவிரமாக முன்னேறி வருவதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
தூத்துக்குடி
எம்.சி.சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வளர்ச்சி பணிகள் வேகமெடித்தன!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பாளை ரோட்டில் புதிய “பேபி மொபைல்ஸ்” வணிக நிறுவனம் திறப்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் “இரவி FM” இணைய வானொலி தொடக்கம் – சமூக மாற்றத்திற்கான புதிய ஒலி!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் விழாக்கோலம் – காமராஜர் 124-வது பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடும் பா.ஜ.க!!
14 Jul 2026
ஜார்ஜ் ரோடு கணேசபுரம் பகுதியில் புதிய சாலை, வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
14 Jul 2026
அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி பீடத்தில் சிறப்பு யாகம், 16 வகை அபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
14 Jul 2026
மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முன்னேற்றத்திற்கு புதிய முயற்சி – தூத்துக்குடியில் ஆவின் பாலகம்–Friends Coffee Cafe-ஐ திறந்து வைத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி!!
13 Jul 2026