தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள “பேபி மொபைல்ஸ்” வணிக நிறுவனத்தை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வணிக நிறுவன உரிமையாளர் சுரேஷ், வட்ட கழக செயலாளர் பாலு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு திறப்பு விழாவில் சிறப்புரையாற்றினர்.

நகரின் வளர்ச்சியுடன் இணைந்து தொழில் மற்றும் வணிக துறையில் இளைஞர்கள் முன்வந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியான முன்னேற்றம் என பேசுபவர்கள் தெரிவித்தனர்.

புதிய மொபைல் வணிக நிலையம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் மொபைல் போன்கள் மற்றும் அசெசரீஸ் வசதிகளை வழங்கவுள்ளது.