தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜார்ஜ் ரோடு கணேசபுரம் பகுதியில் விரைவில் தொடங்கப்படவுள்ள புதிய சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் சாலை, வடிகால் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. 



இந்த ஆய்வின்போது துணை மேயர் ஜெனிட்டா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.