தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிராதேவி கால பைரவர் சித்தர் பீடத்தில், ஆனி மாதம் 30-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை (14.07.2026), அமாவாசையை முன்னிட்டு மதியம் 1.30 மணியளவில் சிறப்பு வழிபாடு பக்தி விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீ பிரத்தியங்கிராதேவிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகமும், தீபாராதனையும் நடைபெற்றன.
இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஸ்ரீ பிரத்தியங்கிராதேவியை பக்தியுடன் வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குதல், புத்திர பாக்கியம் கிடைத்தல், மனநிம்மதி, செல்வ வளம் பெருகுதல், தீராத நோய்கள் நீங்குதல், கடன் தொல்லைகள் விலகுதல், அரசியலில் முன்னேற்றம், முன்னோர்களின் சாப விமோசனம், தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைத்தல், முன்ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் ஆனந்தமும் வளமும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் மற்றும் ஸ்ரீ கால பைரவர் சித்தர் பீட அறக்கட்டளை, ஸ்ரீ பிரத்தியங்கிராதேவி பீடம், அய்யனடைப்பு, கோரம்பள்ளம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.