தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் MLA, ஜெகன் பெரியசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 20.1.2026 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார்.


பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வீடுகள் தோறும் மகளிரை முன்னிறுத்தி நடைபெற உள்ள பரப்புரை, தலைமை அறிவித்துள்ள நட்சத்திர பரப்புரையாளர்களைக் கொண்டு நடைபெற உள்ள பொதுக் கூட்டங்கள், பிப்ரவரி 7ஆம் தேதி விருதுநகர் கல்குறிச்சியில் நடைபெற உள்ள தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தென் மண்டல பாகம் முகவர்கள் – பாக உறுப்பினர்கள் பயிற்சி மாநாடு ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.


மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் கழக செயல்வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மீண்டும் மு.க. ஸ்டாலினை முதல்வர் ஆக்கிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாநில அணி நிர்வாகிகள் வசந்தம் ஜெயக்குமார், அன்பழகன், துறைமுகம் பிளாரன்ஸ், தொகுதி பார்வையாளர்கள் இன்பாரகு, பெருமாள், கணேசன் உள்ளிட்ட பல்வேறு நிலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். சமீபத்தில் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜாவும் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் கழக வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.