தூத்துக்குடி மாவட்டத்தின் அரசியல் மற்றும் சமூகப் பணித் துறையில் தனித்துவமான அடையாளத்தை பதித்துள்ள அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், தன்னலமற்ற சேவை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். அவரது பணிகளையும் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் நம்பிக்கையையும் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
1970ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி பிறந்த இவர், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக விளங்கிய N. பெரியசாமி அவர்களின் மகளாக சமூகப்பணியின் பாதையில் சிறு வயதிலேயே பயணத்தை தொடங்கினார். குடும்ப ஆதரவு மற்றும் கல்வி தகுதிகளுடன் சமூக சேவையில் திகழ்ந்த இவர், கணவர் P. ஜீவன் ஜேக்கப் ராஜேந்திரன் மற்றும் மகன் டாக்டர் J. மகிழ் ஜான் சந்தோஷ், மகள் J. ஜீனா எபி சுந்தரி ஆகியோருடன் குடும்ப வாழ்க்கையிலும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
1990ஆம் ஆண்டு முதல் லயன்ஸ் கிளப் உறுப்பினராக இருந்து பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், மகளிர் சங்க இயக்குநராகவும், கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளராகவும் செயல்பட்டு கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு வலுசேர்த்தார். அரசியல் வாழ்க்கையில் 1996 முதல் 2001 வரை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகவும், 2001 முதல் 2006 வரை உறுப்பினராகவும் பணியாற்றி மக்கள் நலத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.
அதன் பின் சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்து, கால்நடைத்துறை அமைச்சராகவும், பின்னர் சமூக நலத்துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். 2011ஆம் ஆண்டு திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளராகவும், தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்று கட்சியின் வளர்ச்சிக்கும் பெண்கள் பங்கேற்புக்கும் முக்கிய பங்காற்றினார். 2016 முதல் 2021 வரை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும், 2021 முதல் 2026 வரை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
மேலும் 2017 முதல் தற்போது வரை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட கட்சி தலைமை வழங்கியுள்ள இந்த வாய்ப்பு, அவரது சாதனைகள் மற்றும் மக்கள் ஆதரவின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. பொதுமக்களிடையே வலுவான ஆதரவை பெற்றுள்ள கீதா ஜீவன் அவர்கள், மீண்டும் வெற்றி பெற்று மேலும் பல நலத்திட்டங்களை செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
“செயலில் சாதனை – சேவையில் சிறப்பு” என்ற அடையாளத்துடன் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் கீதா ஜீவன் அவர்கள், தூத்துக்குடி மக்களின் நம்பிக்கையையும், தமிழ்நாட்டின் பெருமையையும் தாங்கி நிற்கும் தலைவராக தொடர்ந்து விளங்குகிறார்.