தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர் பதவி அதிகாரப்பூர்வமாக வழங்கும் நிகழ்வு மரியாதையுடன் நடைபெற்றது.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்த மாற்றுத்திறனாளிகள் நலனைப் பேணும் நோக்கில் உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர்களை நியமிக்கும் அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களில் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் நியமன உறுப்பினராக தேர்வானார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு விழாவில், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் ஆணையர் பிரியங்கா ஆறுமுகத்திடம் உறுதிமொழி படித்துக் காட்டி, பின்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நியமன உறுப்பினருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா, கவுன்சிலர் சந்திரபோஸ் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பின்னர் பேசிய நியமன உறுப்பினர் ஆறுமுகம், “இந்த பொறுப்பை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாளில் இந்தப் பதவி கிடைத்தது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி. மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய நாள் இது” என்று கூறினார்.
நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் அமாலுதீன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி, மாநகர சிறுபான்மை அணி தலைவர் செய்யது காசிம் அந்தோணி, சக்திபிரகாஷ் குமார், சம்சு, ஆணையரின் நோக்குமுக உதவியாளர் துரைமணி, மேயரின் நோக்குமுக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமும் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களில் 22 மனுக்களுக்கு 20 மணி நேரத்திலேயே தகுந்த உத்தரவுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி
“தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பொறுப்பேற்பு – மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா வாழ்த்து”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாமன்றத்தில் ஆறுமுகம் நியமன உறுப்பினராக பதவி ஏற்றார் – மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!!
அடுத்த
“துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு – தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்”
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026