மாநில திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நகரம் முழுவதும் உற்சாகம் நிலவியது. இதன் ஒரு பகுதியாக, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பழைய அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார்.
விழாவின் சிறப்பம்சமாக, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி, பொதுமக்கள், ஆட்டோ தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கி வாழ்த்துகளை பகிர்ந்தார்.
நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாவட்ட, மாநகர, மண்டல, வட்ட அளவிலான அணி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் இளைஞரணி அமைப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை மக்களுடன் இணைந்து கொண்டாடினர்.
தூத்துக்குடி
“துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு – தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பொறுப்பேற்பு – மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா வாழ்த்து”
அடுத்த
எம்பி கனிமொழியின் வாழ்த்து — கலைஞருக்கு மரியாதையுடன் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026