தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க “தமிழ்நாடு மரங்கள் பாதுகாப்புச் சட்டம்” என்ற புதிய தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலரும், மதர் சமூக சேவை நிறுவனம் இயக்குநரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநிலத் தலைவருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அவரது மனுவில் கூறியிருப்பதாவது அரசின் சட்ட விதிகள் படி, பொது நிலங்களில் உள்ள மரங்கள் அனைத்தும் பொதுச் சொத்துகளாகக் கருதப்படுகின்றன. அந்த மரங்களை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி அவசியம் என அரசாணைகள் குறிப்பிடுகின்றன. ஆனால், அனுமதியின்றி மரங்களை வெட்டினால் எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்ற தெளிவான சட்டவிதி தமிழகத்தில் இல்லை. இதனால் பல இடங்களில் மரவெட்டுத் தாண்டவம் தொடர்ந்து நடைபெறுகிறது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது “பசுமை பரப்பளவு தமிழகத்தில் 33% இருக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தும், தற்போது அது 23.8% மட்டுமே உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இது வெறும் 5% ஆக மட்டுப்பட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கம் 2022ஆம் ஆண்டு முதல் தொடங்கியிருந்தாலும், ஏற்கனவே உள்ள மரங்களை சட்டபூர்வமாக பாதுகாக்கும் தனிச் சட்டம் இல்லாததால் பல மரங்கள் அழிக்கப்படுகின்றன,” என்றார்.
பனைமரங்களை வெட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்கூறிய அவர், அதேபோல் அனைத்து வகை மரங்களையும் பாதுகாக்கும் தனிச் சட்டம் அவசியம் என்றார். “காப்புக்காடுகள் மட்டுமன்றி, பொதுநிலப் பகுதிகளில் உள்ள மரங்களையும் பாதுகாக்கும் சட்டம் வேண்டும். மரங்களை வெட்டுவதற்கு முன் பசுமை குழுவின் அனுமதி அவசியம் என சட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டும்,” எனவும் குறிப்பிட்டார்.
அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பொது இடங்களில் மரங்களை வெட்டுவது குறித்த புகார் எங்கு அளிக்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லாததாலும், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருப்பதாலும் மரவெட்டல் அதிகரித்து வருகிறது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
“உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மர பாதுகாப்புக்கான தனிச் சட்டங்கள் அமலில் உள்ளன. அதேபோல் தமிழகத்திலும் ‘தமிழ்நாடு மரங்கள் பாதுகாப்புச் சட்டம்’ என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டால், பசுமை பரப்பளவு வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் சமநிலைக்கும் இது பெரும் வரவேற்பு அளிக்கும்,” என சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் எஸ்.ஜே. கென்னடி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
“பசுமை தமிழ்நாட்டுக்காக புதிய சட்டம் அவசியம்!” — முதலமைச்சருக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் எஸ்.ஜே. கென்னடியின் கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மச்சாது நகர், சங்கரப்பேரி வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி – மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!
அடுத்த
பெண்கள் பாதுகாப்பே நோக்கம் – தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி மாபெரும் கண்டனக் குரல் எழுப்புகிறது!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026