கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் இன்று India Book of Records மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து “தூய்மையான எரிசக்திக்கான பசுமை எரிசக்தி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

பசுமை எரிசக்தி பயன்பாட்டின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் எதிர்கால தலைமுறைக்காக தூய்மையான ஆற்றல் தீர்வுகளை உருவாக்கும் அவசியம் குறித்தும் அமைச்சர் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.

பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், India Book of Records பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி, மாணவர்களிடையே பசுமை மற்றும் தூய்மையான எரிசக்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது.