ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சத்யா மஹாலில், தமிழ்நாடு முதலமைச்சரும் கழக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பரப்புரை தொடக்க விழா நடைபெற்றது.


வீடு தோறும் சென்று அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கிட மகளிர் அணி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மகளிர் அணியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.


அத்துடன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்துகொண்டு, தொகுதிக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய மற்றும் பகுதி மகளிர் அணி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பரப்புரையை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


மாநில மகளிரணி பிரச்சார குழுத் தலைவர் ஜெசி பொன்ராணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன்னிசை, ஒட்டப்பிடாரம் தொகுதி ‘வெல்லும் பெண்கள்’ பரப்புரை பொறுப்பாளர் மீனாட்சி உள்ளிட்ட மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பரப்புரை மூலம் திராவிட மாடல் அரசின் சாதனைகள் ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டு செல்லப்படும் என உறுதியுடன் கூட்டம் நிறைவடைந்தது.