இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதுடன், மீனவர்களையும், படகுகளையும், விடுவிக்க வேண்டும். என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் அடிக்கடி இது போன்ற சிறைபிடிக்கப்படுவதால் அவர்களின் குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் 110 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பதுடன், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.