தூத்துக்குடி ஸ்ரீசித்தர்நகர் அய்யனடைப்பு, கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்ரீபிரத்தியங்கிராதேவி – ஸ்ரீகாலபைரவர் சித்தர்பீடத்தில், தை மாதம் 26-ம் தேதி (09.02.2026) திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் பக்தி மிக்க சூழலில் நடைபெற்றது.
சாக்தஸ்ரீ சீனிவாச சித்தர் தலைமையில், ஸ்ரீகாலபைரவர் சித்தர்பீட அறக்கட்டளை சார்பில் மதியம் 1.30 மணிக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் காலபைரவருக்கு பால், பன்னீர், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை தரிசித்து அருள்பெற்றனர். விழாவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சற்குரு சீனிவாச சித்தர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.