டாஸ்மாக் ஊழியர்களின் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டன.

மாவட்டம் முழுவதும் உள்ள 125 கடைகளில் 120 கடைகளை ஊழியர்கள் இழுத்து மூடியதால், மதுவாங்க வந்த மதுப்பிரியர்கள் கடை வாசலில் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். சிலர் வேறு பகுதிகளில் கடைகள் திறந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அங்கும் இங்குமாக அலைந்தனர்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். திடீர் கடையடைப்பு காரணமாக நகரம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.