அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 8ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று முதியோர் இல்லங்களில் இனிப்பு மற்றும் காலை உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 8ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழக பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டி.டி.வி. தினகரன் ஆணைக்கிணங்க, கழகத்தின் துணை பொதுச் செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான, கடம்பூர் இளைய ஜமீன்தார் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜாவின் ஆலோசனை படியும், தூத்துக்குடி மாநகர மாவட்ட கழக செயலாளர் ஜானியேல் சாலமோன் மணிராஜ் தலைமையில், சிதம்பர நகர் 4வது தெரு பாசகரங்கள் முதியோர் இல்லத்தில் இன்று (15.03.2025) காலை 9 மணியளவில் முதியோர் இல்லங்களில் தங்கி இருக்கக்கூடிய முதியவர்களுக்கு காலை உணவு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து நிர்வாகிகள் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் சண்முக குமாரி, மாநில ஓட்டுனர் அணி இணை செயலாளர் நவஜீவன் கே. பெரியசாமி, தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பூலோக பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் ஸ்ரீவை. சிவராஜா, மற்றும் மாநில, மாவட்ட ,பகுதி, வட்டக் கழக, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், உட்பட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

