தூத்துக்குடி அருகே அய்யனடைப்பு கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தில், பங்குனி மாதம் 27ஆம் தேதி (10-04-2026, வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணியளவில் காலபைரவருக்கு தேய்பிறை அட்டமி பூஜை, அபிஷேகம் மற்றும் மகாயாகம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சித்தர் பீடத்தின் தலைவர் சீனிவாச சித்தர் தலைமையேற்றார். தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற வேண்டியும், உலக அமைதி நிலவ வேண்டியும் பக்தர்கள் அனைவரும் ஒருநிமிடம் மௌன பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பூஜை மற்றும் யாகம் முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆன்மிக உற்சாகத்துடன் வழிபட்டனர். நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.