உலக காசநோய் தினமான மார்ச் 24 இன்று திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் வைத்து உலக காசநோய் தினம் நிகழ்ச்சி தமிழ்த்தாய் பாடலுடன் தொடங்கியது.
ஆட்சியர் இளம் பகவத் உலக காசநோய் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசம்) மருத்துவர் சுந்தரலிங்கம் திட்ட விளக்கவுரை ஆற்றினார். முதல்வர் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி ஜெயந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சிவக்குமார் கருத்துரை ஆற்றினார்.
இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரியதர்ஷினி, துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) மருத்துவர் யமுனா, துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (குடும்ப நலம்) மருத்துவர் பொன்ரவி, மாநகர நல அலுவலர் மருத்துவர் அரவிந்த் ஜோதி, உறைவிட மருத்துவர் சைலேஷ் ஜெபமணி, தாசில்தார் முரளிதரன், பஞ்சாயத்து அலுவலர்கள், தன்னார்வலர்கள், செவிலியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவரும் காசநோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாவட்ட காசநோய் மையம் நலக்கல்வியாளர் முத்துக்குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.