தூத்துக்குடியில் வரும் மார்ச் 23ஆம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது

தூத்துக்குடி ராமையா மஹாலில் வரும் மார்ச் 23ம் தேதி வி.ஏ.எஸ்.பி கிரகாம்சம் நினைவு அறக்கட்டளை மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் முகாமில் கண்புரை நோயாளிகள் முகாம் அன்றே தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நவீன முறை சிகிச்சை மருந்து, தங்கும் வசதி உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

உயர்ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய், உள்ளவர்கள் பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

ஏற்பாடுகளை கிரகாம்சம் நினைவு அறக்கட்டளை சார்பில் பிரேம்குமார், பாலகணேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.