தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த 4 பேரை மடக்கி விசாரித்தனர்.
அந்த பைக்கை 17 வயது சிறுவன் ஓட்டி வந்தது தெரிய வந்தது அந்த பைக்கை போலீசார் பறிமுதல் செய்து மத்திய பாகம் போலீசில் ஒப்படைத்தனர்.
வி.இ., சாலையில் நடத்திய வாகன சோதனையின் போது 15 வயது சிறுவன் பைக் ஓட்டி வந்தது தெரிய வந்தது. அந்த பைக்கை பறிமுதல் செய்து தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த இரு சம்பவங்களிலும் சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதி அளித்த பெற்றோரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
18 வயது நிரம்பாத இளஞ்சிரார்கள் மோட்டார் வாகனங்கள் ஓட்டினால் இதுபோல தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றம்
தூத்துக்குடியில் பைக் ஓட்டிய 2 சிறுவர்கள் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு!!
Admin
1 நிமிட வாசிப்பு